என்னவனே சீக்கிரம் வந்துவிடு

என்னவனே ....

இன்னும் எத்தனை காலங்கள் இப்படியே போகும் .....

வாங்கிய வட்டி கடன் மட்டுமல்ல ..

என் வயிறும் கூட வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது ....

மாதம் தோறும் மருத்துவமனை சென்றாயா ?

என நீ தொலைபேசியில் கேட்பது போதும் ...

என் கரம் பிடித்து நீ என்னை கூட்டி செல் .......

நாடு கடந்து நீ அங்கே

நாளும் படும் அவதிகள் போதும் ....

இன்னும் எத்தனை காலங்கள்

வெளிநாட்டில் அகதியாய் வாழ்ந்து கொண்டிருப்பாய்

என்னவனே .... சீக்கிரம் வந்துவிடு...

அப்பா எங்கே ? என தினம் தினம்

என் வயிற்றில் எட்டி உதைக்கும்

நம் மகனின் பிஞ்சு கால்களை காண ......

என்னவனே .... சீக்கிரம் வந்துவிடு...

எழுதியவர் : கலைச்சரண் (10-Jan-16, 7:11 pm)
பார்வை : 118

மேலே