அர்த்தம் என்னவென்று

அர்த்தம் என்னவென்று ?
முடிந்து வைத்த
முந்தானையிலிருந்து
இருபத்தைந்து பைசா
எனக்கும்….?
ஐம்பது பைசா
இளவலுக்கும்
தந்தாள் பாட்டி!

ஏன் பாட்டி
இது நியாயமோ ?
வினவி….பின்
முகம் சுளிக்க
விட்டு கொடுத்தல்
பெருந்தன்மை!

பெருந்தன்மைக்கான
பலன்களோ
மிகப் பெரிதென்றாள்
பாட்டி!
விளக்கம் ஏறவில்லை
காதில்!
பொல்லாத பாட்டி என்றேன்!
பாட்டியின்

இறுதி மூச்சு இழுக்கையில்
பொல்லாத பாட்டியோ…
இட்லி இரண்டு கேட்க
இருபத்தைந்து பைசாவில்
இரண்டு இட்லி வாங்கிதர
இரண்டுவாய் சாப்பிட்டு
இறுதி பயனத்தின் போதே…
என்றும் நல்லா இருப்பே
என வாழ்த்தினாள்!

ஐம்பது பைசா பெற்ற
இளவலோ…
திரைப்படம் பார்த்து திரும்பி…
இறந்த பாட்டியை கண்டு
திகைத்து
இறுதி நேரத்தில் இல்லையே
ஏங்கினான் இளவல்!

பொல்லாத பாட்டியின்
வாழ்த்துதலுக்கு பின்னே
இருபத்தைந்துக்கும்
ஐம்பது பைசாக்களான
புரிந்த து
அர்த்தம் என்னவென்று?

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (10-Jan-16, 8:27 pm)
Tanglish : artham ennavendru
பார்வை : 100

மேலே