விலைத் தந்ததோ

விலைத் தந்ததோ!
காற்றோடு …..
பயணித்து வந்த
கானம் காதில்
விழவே….
எட்டி பார்த்தேன்
தெருவில்!

தெருவில்
புல்லாங்குழல்
விற்பவன்!

புல்லாங்குழல்
ஒன்றை வாங்கி
காற்றை அனுப்பினேன்!
நானும்….
கானம்தான் எழவில்லை!


கானமும் எழவில்லை
என்றே
எண்ணவில்லை!
விலைத் தந்ததோ
புல்லாங்குழலுக்கல்ல!
அவனின்
இனிய கானத்துக்கும்!
அவனின்
தேநீர் செலவுக்குமே!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (10-Jan-16, 8:31 pm)
பார்வை : 76

மேலே