பிழைகள்

மழை நீரது
மண்ணை கூடிட
சகதி என
விளைந்த கதை
என் கதை..

தரையோடு
நான் புரள
தழுவ ஆளில்லா
நிலை என் மழலை..

விதி எனும் வித்தில்
விதைந்து வீதிக்கு
வந்த விதை என் கதை..

மதி தவறிய
மனிதனின் மரபு
தவறிய கரு நான்..

சுகவாசி ஒருவனின்
சுகம் காணா சிசு நான்...

இருள்சூழ்ந்த போர்வைக்குள்
துளிர்த்து துடைத்து வீசப்பட்ட
வியர்வை துளி நான்...

எழுதியவர் : (10-Jan-16, 9:47 pm)
பார்வை : 95

மேலே