மார்கழி மாதம்

மார்கழி மாதத்திற்காக ஏங்கியது.....
எனது மனம்....
காலையில் நீர் மூழ்கி.....
தலையில் துண்டுடன்.....
ஒரு சேர உன் கூந்தலை முடித்து.....
நான் வைக்க தவறிய குங்குமத்தை........
உனது கரம் கொண்டு ..............
நெற்றியில் திலகம் இட்டு .........
புது உடை அணிந்து - பதுமை நீ
வெளிவர ...........
எங்கே சென்றது.........
எனது இதய துடிப்பு......
நின்று விட்டதடி......... பெண்ணே
தினம் நீ போடும் கோலங்களுக்கும்
நீ தீட்டும் வண்ணங்களுக்கும்
பயன்படுத்தும் தூரிகையாக
உனது விரல்களும் .............
கோலமிட மாவுடன்
நீ திரும்பும் திசை எங்கும்
திரும்பி கொண்டிருக்கும்
உனது இடையும்............
எங்கிருந்து பொன் கொண்டு
உன்னை பெண்ணாய்
வடித்தானோ................?
தாமரை இலையில்
அமர்ந்திருந்தவளோ.........?
ஒற்றை கால் கொண்டு அமர்ந்து
இருகிறாய் என்று
கேட்க துடிக்கும்
எனது உதட்டின் விசும்பலை.....
எப்படியடி
சொல்லி புரியவைப்பேன் ........................