நினைவின் நிறை

மலரா நீ இறகா
காற்றில் மலரின் வாசமா நீ
குளிர் பனியில் தோன்றும் புகையா நீ
நின்னுடல் நிறையை ஒப்பிட
நிலத்தில் உவமை ஏதுமில்லை
அமீபாவே உனை வெல்லும்
தராசு முள்ளும் தீர்ப்பு சொல்லும்

விளக்கு ஒளியின் நிறையும் என்ன
ஓசை ஒலியின் எடையும் என்ன
அளந்து பார்க்க அளவுகோல் ஏது
அழகே உனை அளக்க
என் பார்வை போதுமே

உள்ளத்தில் உந்தன் நினைவை சுமந்து
உலகில் கால்கள் பதிக்கின்றேன்
இல்லையென்றால் நான் விண்ணில் மிதந்திருப்பேன்
உயிரே உன் உடலைவிட
உன் நினைவின் நிறை அதிகம்

விழிப்பிலே உன்னை விழிகள் தேடும்
துயிலிலே உன்னை என் கனவு தேடும்
உந்தன் நினைவுகள் என் அறிவை நிரப்ப
மூழ்கி போனேனடி
எடை கூடிபோனேனடி

காற்றில் மாசு தாங்கமாட்டாய் - என்
கண்ணில் ஒளிந்து கொள் கண்ணே
தண்ணீர் தாகம் எடுத்தால்
என் கண்ணின் நீரை பருகி கொள் என் கண்மணியே...
இருளை கண்டு அச்சம் கொண்டால்
என் விழியின் வழியே இதயம் செல்வாய்
அழகே உனக்கங்கு பொழுது போக
எழுத்தில்லா என் கவிகள் நிறைய உண்டு…..

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (11-Jan-16, 3:01 am)
Tanglish : ninaivin nirai
பார்வை : 284

மேலே