பனித்துளிகள்
- - - - - - - - - - - - - -
விடியலில்
ஆதவன்
துடைத்து விட்ட
நிலாவின்
கண்ணீர்த்துளி !
- - - - - - - - - - - - - -
இந்த பூக்காத
புற்களின்
பூக்கள் !
- - - - - - - - - - - - - -
சங்குக் கழுத்து
குழந்தை நிலாவின்
அறுந்து கொட்டிய
மூத்துமாலை
மணிகள் !
- - - - - - - - - - - - - - -
முடி சூடிய
பூமித்தாயின்
வேந்தர்கள் !
- - - - - - - - - - - - - - -
தலைப்பாகை
அணிந்து
மணவறைக்குள்
காத்திருக்கும்
மாப்பிள்ளைகள் !
- - - - - - - - - - - - - - - -
வான்
தேவதையின்
நகைப்பில்
முகிழ்ந்த மல்லிகை
முகைகள் !
- - - - - - - - - - - - - - - -
இளங்காற்றின்
பசி அடங்க
புற்றரை கொடுத்த
புட்டிப்பால் !
- - - - - - - - - - - - - - - -
புலர்தலில்
கதிர்வீச்சின் சூடடங்க
நிலாப்பெண்
தெளித்த
மஞ்சள் தண்ணீர் !
- - - - - - - - - - - - - - - - -
கதிரவனுக்கு
தெளித்த
வாசனைப்
பன்னீர் !
- - - - - - - - - - - - - - - -
பூமி
ஈரக்கொண்டையை
அவிழ்த்து
சிலுப்பிய
தூவானம் !
- - - - - - - - - - - - - - - - -
இந்த
புல் குழந்தைகள்
பூமிக்கு
இதழ் பதித்து
ஆனந்தித்த
எச்சில்
முத்தங்கள் !
- - - - - - - - - - - - - - - -
- பிரியத்தமிழ் -