அறிவுபூர்வமான சிந்தனைகள்

* எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.

* ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான்.

* சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால்
ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது.

* அவசியப்பட்டதை வாங்குவான் கணவன்.
ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி.

* மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும்.
சினந்து கொண்டு பரிமாறினால் வாழ்க்கையே விழும்.

* வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.-பெரிதும் திண்டாடுவீர்கள்.

* 'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும்.

* கொண்டவன் துணை உண்டானால்
கொடிய பாம்பும் புடலங்காய்.

* உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும் உபத்திரவம்.

* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.

* ஒருவன் பேசுவது மற்றவனுக்கு விளங்காவிட்டால் அது தத்துவம்.
அவன் பேசுவது அவனுக்கே விளங்காவிட்டால் அது வேதாந்தம்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (12-Jan-16, 11:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 514

மேலே