வெல்வதும் வீழ்வதும்

வெல்வதும் வீழ்வதும்!
விதையொன்று விழுந்தால்
விருட்சமாகும்!
வீணாய் இருந்தால்
வீணாய் போகும்!

எறும்பாய் இருந்தால்
சுறுசுறுப்பாகும்!
சோம்பலாய் இருந்தால்
சுகமா வரும்!

கருவொன்று பிறந்தால்
கதைகளாகும்!
கருத்தொன்று எழுந்தால்
கவிதைகளுமாகும்

சுனையொன்று கொட்டினால்
அருவியாகும்!
வினையொன்று ஆற்றினால்
வினைகளாகும்!

வினாஒன்று எழுப்பினால்
விடையொன்று ஆகும்
கனாஒன்று கண்டால்
களிப்புமிக ஆகும்!

மலரொன்று மலர்ந்தால்
மணமாக வீசும்!
நிலவொன்று ஒளிர்ந்தால்
நித்திரை சுகமாகும்!

சொல்லொன்று உதிர்த்தால்
வார்த்தையாகும்!
சுள்ளென்று விழுந்தால்
எரிச்சலாகும்.

சொல்லொன்றா ,சுள்ளெனறா ?
சொல்லிடுக தோழா
வெல்வதும் வீழ்வதும்
அதனின் படியே!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (13-Jan-16, 1:41 pm)
பார்வை : 422

மேலே