காட்சி பிழை யாகாது

மனவாசல் வந்துகஜல் மழைகட்டும் தோரணம்!
மௌனங்கள் கூட,இங்கு மொழியாகக் காரணம்!

வழியெங்கும் மலர்தூவி வாழ்த்துமொரு பாமரம்!
வருகின்ற இளவேனில் எடுத்துவரும் சாமரம்!

விழிகளிலே உன்பிம்பம் நிறைந்திருக்கும் எப்போதும்!
வீழ்ந்ததடீ!, என்னுள்ளே ஒருசொர்க்கம் முப்போதும்!

கனவெல்லாம் நீயாகக் கடந்துவழி போகிறேன்!
கதிர்மதியைக் காணாமல் கரைந்தபடி சாகிறேன்!

என்னுயிரில் அமுததெனவே உன்,நினைவு கூடும்!
இனியெனக்குப் பிறப்பில்லை நித்தியம்,என் னோடும்!

ஆசைகளை உன்,நினைப்பின் நெருப்பழித்து மூடும்!
ஆரெனக்கு இலையெனினும் இனி,நீயே போதும்!

வாழ்வெனக்குப் பிழைத்ததென இவ்வுலம் கூறும்!
வாழ்த்தெனக்கு அதுவெனவே என்மனமும் தேறும்!

வான்வெளியில் எனையுந்தி உன்,நினவு தள்ளும்!
வரயில்லாப் பயணமதில் என்னுயிரும் செல்லும்!

மழையில்லை வெயிலில்லை குளிரில்லை முன்பே!
விழைவில்லை வெறுப்பில்லை விதியில்லை அன்பே!

பிழையில்லை சரியில்லை பெருமையதும் இல்லை!
குழையணியும் நானாம்;உன் காதெனது எல்லை!

காட்சிபிழை யாகாது! கவிதைபிழை யாகும்!
காணுமுனைப் பாடவரும் தமிழும்தடு மாறும்!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (14-Jan-16, 10:43 am)
பார்வை : 261

மேலே