என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது ???

பசு , எருமை மாடுகள் வீட்டில் வளர்க்கும் போது காளை மாட்டை மட்டும் எப்படி காட்சிப்படுத்த கூடாதா பட்டியலில் சேர்த்தாங்க என்று இன்னமும் எனக்கு சந்தேகம் தான்..

நம் வீட்டில் ஒரு பொருளின் பயன்பாடு இல்லை என்றால் நாம் அதை ஒதுக்கி விடுவோம்.. அது தான் நாட்டுக்கும் நம் இன கலைகளின் விசயத்தில்..

பால் மாடுகள் எல்லாரும் வளர்ப்பார்கள்.. காளை மாட்டுகளை சிலர் தான் வைத்திருப்பர். காளையால் தற்போது உழவுக்கு கூட பயன்படுத்துவது இல்லை. அப்போது அவர்களை ஊக்கப்படுத்தும் விதம் தான் ஏறுதழுவல். அதும் இல்லமால் போனால் காளை இனம் அழியும். நம் பால் மாடுகளின் விருத்தி குறையும். அப்புறம் ப்ரயிலர் கோழி போல ஒரு பால் மாட்டு இனம் வரும்.. அதோட எல்லா நோய்களும் வரும்.. இது எல்லாம் நமக்கு தேவை தானா.. விவசாய பொருட்களில் ஹைப்ரிட் கொண்டு வந்து அதையும் அழியாச்சி..இப்போ உரம் இல்லமால் எழும்ப மாட்டேங்குது பயிர்கள்.. மிச்சம் இருப்பது தமிழனின் மரபணு மட்டுமே.. அதையும் முடிச்சிடுவாங்க..

விலங்குகள் நல அமைப்பு பராமரிக்கணும்.. இல்ல உரிமையாளர்களிடமே இருக்கட்டும், பராமரிக்கும் முறை மட்டும் எப்படி என்று ஆய்வு மட்டும் செய்யலாம். விலங்குகள் நல அமைப்பு பராமரிக்குறேன் என்று கையகப்படுத்தி விற்க கூடாது.. இடம் இல்லை, பணம் இல்லை என்று சொல்லி கொல்ல கூடாது.

இந்த விலங்குகள் நல அமைப்பு எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி அரசு கவனம் கொள்ளவேண்டும்.. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரிவது இல்லை..

தடை செய்ய கையெழுத்து எல்லாம் வாங்குகிறார்கள்.. யாரிடம் வாங்க வேண்டும். ஒரு மாநிலத்தில் நடுக்கும் விஷயம் என்றால் , அதும் பாரம்பரியம் என்றால் அங்கு உள்ள மக்களிடம் தான் கேட்கவேண்டும்.. வேண்டுமா.. வேண்டாமா என்று... எங்கோ இருக்கும் பிரபலங்களிடம் வாங்குவது ஏன்? வளர்ப்பது சாதாரண மக்களா? இல்லை அந்த பிரபலங்களா?

எங்கோ இருக்கும் அமைப்பு வந்து இங்கு வந்து இவ்ளோ தடை வாங்கும் அவசியம் என்ன? அவ்ளோ பணம் எப்படி விலங்குகள் நல அமைப்புக்கு கிடைகிறது?

எல்லாமே கேள்விகளாக மட்டுமே உள்ளது.. தீர்வு மட்டுமே காண முடியவில்லை.. முயலவில்லை.. பொங்கல் முடிந்தவும் நான், நீங்க உட்பட மறந்து விடுவோம்.. மீண்டும் தூசு தட்டி எடுக்க ஒரு வருடம் ஆகும். அதுவரை எத்தனை உயிரினம் அழிக்கப்படுமோ தெரியாது.. மறைமுகமாய் நாம் எதை நோக்கி சென்று இருக்கிறோம் என அப்போது தான் ஒரு பார்வை பார்போம்..

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (14-Jan-16, 11:59 am)
பார்வை : 547

சிறந்த கட்டுரைகள்

மேலே