காதல் பார்வை
இலவம் பஞ்சு,நைட்ரஜன் குண்டு,
மெல்லிய இறகு,கூரிய அம்பு ,
மெல்லிசை,போர்சங்கு,
பூந்தோட்டம்,முட்காடு,
பனித்துளி,கடலின் பிரவாகம்,
அத்தனையும் உள்ளடக்கிய
உன் இயல்பான பார்வை....
"ஆம்தானே" எனக்கேட்டால்
"தவறு, காதல் மட்டுமே" எனச் சிரிக்கிறாய்...
இருவர் சொல்வதும் உண்மைதான் என்கிறது,
வரலாறும்,எதிர்காலமும்...