கொஞ்சம் சிரியுங்க பாஸ்

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பந்தல் நிறையக் கூட்டம் வரும்னு சொன்னே காலியா இருக்கேப்பா!
எல்லாரும் வயிறு நிறைக்க போயிருக்காங்க! வந்ததும் பந்தல் நிறைஞ்சிரும் தலைவரே!

2. கட்சியோட கொள்கைகளை ஏன் தலைவர் கல்வெட்டா அடிச்சு ஒட்டச் சொல்றாரு?
பின்னால யாரும் கட்சி கொள்கைகளை காத்துல பறக்க விட்டதா சொல்லக் கூடாதாம்ல!

3. என்னடி இத்தனை நாளா உனக்கு டாப் அப் பண்ண பையனை காணோம்! புது ஆளா இருக்கு!
நெட் ஒர்க்கை மாத்திட்டேண்டி!

4. கல்யாணம் பண்ணிக்கொடுத்த உங்க பொண்ணோட வாழ்க்கை இருண்டிருச்சுன்னு சொல்றீங்களே மாப்ள என்ன பண்றார்?
ஈ.பி யிலே வேலை செய்யறார்!

5. சிக்கலை அவிழ்க்கிறேன்னு முன் வந்த மந்திரியார் மீது ராஜா கோவிச்சுக்கிட்டாராமே! ஏன்?
அது மகாராணியின் கூந்தலில் விழுந்த சிக்கலாம்!

6. நீ எதுக்கு உன்மாமியாருக்கு வொய்ட் பெனாயிலை ஊத்திக் கொடுத்த?
வெளுத்ததெல்லாம் பால்னு நம்பிருவாங்கன்னு சொன்னாங்க! அதை டெஸ்ட் பண்ணத்தான்!


7. டாக்டர் அந்த பேஷண்டுக்கு அடிக்கடி நினைவு திரும்பி திரும்பவும் மயக்கம் ஆயிடறார்!
நினைவு திரும்பறப்ப நம்ம ஆஸ்பிடல் பில்லை காட்டாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (15-Jan-16, 9:34 am)
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே