பொங்கல் சமய விழாவா சமூக விழாவா

பொங்கல் சமய விழாவா சமூக விழாவா

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாதம் முதல் திகதியில் உழவுத் தொழிலுக்குத் துணை புரிந்த சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்வதே தைப்பொங்கல் தினமாகும்.

தைப்பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசிய விழா.இது மதம் கடந்த தமிழர் பண்டிகை. இவ்விழாவிற்கு சமயச் சாயம் பூசுவதென்பது அறிவிலிகள் செயலாகும்.இது அனைத்துத் தமிழருக்கும் பொதுவான பண்பாட்டு விழா.

நாம் கொண்டாடி வருகின்ற அனைத்து பண்டிகைகளுக்கும் பின்னால் அவை கொண்டாடப்படுவதற்கு காரணமாக ஏதோ ஒரு கடவுள் சார்ந்த கதை புனையப்பட்டிருக்கும். பொதுவாக கடவுளையோ, அரசர்களையோ, வீரர்களையோ முன்னிலைப்படுத்தியே பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது.ஆனால் பொங்கல் என்பது இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழனின் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் இயற்கை சார்ந்த விழாவாகும்.

தமிழர் பண்டிகைகளுக்கு சமயச் சாயம் பூசாது, சமூக விழாவாகக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
- பொலிகையூர் ரேகா

எழுதியவர் : (15-Jan-16, 11:14 am)
சேர்த்தது : பொலிகையூர் ரேகா
பார்வை : 4741

சிறந்த கட்டுரைகள்

மேலே