ஆயிரம் சாதனை
![](https://eluthu.com/images/loading.gif)
ஆயிரம் சாதனை
மலைப்பாம்பொன்று
மாயமாய் மறைய….
கூட்டமாய்
கறையான்கள் போதும் !
ஒருவன் தலைசாய
ஒரே ஒரு
உறைவாள் போதும்!
பண்பாளர் ஆவதற்கு
ஒரே ஒரு……
அன்பர் போதும்!
நண்பர்கள் சிரித்திருக்க
நான்கே….
நண்பர்கள் போதும் !
மகாத்மா காந்திக்கு
உதவிய….
அரிச்சந்திர புராணம் போல
அறிவுநூல் ஒன்று போதும்
ஆயிரம் சாதனை
படைக்கலாம் வாரீர் !