தளர்ச்சிதனை தள்ளிவிடு

தளர்ச்சிதனை தள்ளிவிடு !

நதிக்கரை நீரினில்
குளி(க்க)ரென்ற தயக்கம்
குதிரைமேல் அமர்ந்திட
தள்ளுமென தயக்கம் !

பொழிந்திடும் மழைதனில்
நனைந்திட தயக்கம் !
அழுதிடல் அழகோ ?
ஆணுக்கு தயக்கம் !

வேலையைச் சடுதியில்
முடித்திட தயக்கம் !
நாளைப் பார்க்கலாம்
நேரத்திலே தயக்கம் !

பனிவிழும் பொழுதினில்
பரவச மயக்கம் !
எழில்கொஞ்சும் இயற்கையில்
என்றென்றும் மயக்கம் !

காலையில் கதிரவன்
காட்சியில் மயக்கம் !
மாலையில் நிலவினின்
ஒளிதன்னில் மயக்கம் !

மயக்கத்தில் மூழ்கிடு !
மனதில் எழுச்சிபெறு!
தயக்கத்தினை தள்ளிவிடு
தரணிதனில் வெற்றிபெறு !

மயக்கம் என்பது மகிழ்ச்சி
தயக்கம் என்பது தளர்ச்சி
மயக்கம் என்பது உனதானால்
தளர்ச்சி தனையே தள்ளிவிடு!

----- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (15-Jan-16, 6:26 pm)
பார்வை : 195

மேலே