சக்தி முதல் அத்தி வரை - மாறுபட்ட புனைவு - - - சக்கரைவாசன்

சக்தி முதல் அத்தஈ வரை
***********************************************
சத்தி எத்தி வித்தி ஏத்தி ஊத்தி காத்தி எத்தி வத்தி
சித்தி பாத்தி வித்தி ஈத்தி புத்தி ஊத்தி கீத்தி ஏத்தி
சொத்தி பத்தி சேத்தி வத்தி பொத்தி பொத்தி பாத்தி காத்தி
சுத்தி பாத்தி ஒத்தி தேத்தி சேத்தி வத்தி ஏத்தி வத்தி
சேத்தி யுத்தி வித்தி புத்தி சுத்தி மாத்தி வித்தி ஒத்தி
சுத்தி சுத்தி சித்தி மாத்தி அத்தி ஆத்தி நித்தி நித்தி
சித்தி ஒத்தி தொத்தி தூத்தி அத்தி ஆத்தி சித்தி அத்தியே -- ஆம் !

பாடல் வரி விளக்கம்
**********************
வரி 1. நமது சக்தியைக் கொண்டு (வித்து ) பிள்ளை பெற்று ஊட்டிக் காத்து எடுத்து வளர்த்து
வரி 2. சிரித்துப் பார்த்து கல்வி புகட்டி புத்திமதி கூறி மேன்மையுறச்செய்து
வரி 3. சொத்து பத்துகள் சேர்த்துவைத்து பொத்தி பொத்தி பாதுகாத்து காப்பாற்றி
வரி 4.சுற்றிப் பார்த்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து சேர்த்துவைத்து ஏற்றம் அளிக்க
வரி 5. அப்பெண்ணின் யுக்தி (வித்தி புத்தி ) மகனின் புத்தியை நல் குழப்ப மகனும் அதற்கு ஒப்ப
வரி 6.. குழம்பி குழம்பி புத்தி மாறி அப்பன் அம்மையை நிதமும் நிந்தித்து
வரி 7. சிந்தனை இன்றி தொடர்ந்து துன்புறுத்த அப்பன் அம்மை மனம் நொந்து இயற்கை எய்தி
வெறும் சாம்பல் துகளாய் நீர்ப்பவரே

( இது ஒரு மாறுபட்ட முயற்சியே , குழப்புவதற்காக அல்ல )

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Jan-16, 10:41 pm)
பார்வை : 116

மேலே