பெண் பிள்ளைகள் பூக்களே

கல்யாணம் பேசி ஒரு முடிவுக்கு வருமுதலே
தரகர் தனக்கு இவ்வளவு பைசா தரவேண்டும்
என்று தன் முடிவை சொல்லிடுவார்
அதற்குள்ளே மாப்பிள்ளை பெண்ணுக்கு பிடிக்குதோ
இல்லையோ ப்ரோக்கர் அவசரம் காட்டிடுவார்
என்னய்யா உலகமிது காசு காசு காசு
திருமணம் அவசரம் அவசரமாக செய்து விடலாகாது
ஒருமுறை ஒருதிருமணம் பேசி
மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண்ணைப் பார்த்து
ஓகே சொல்லி விட்டு போய் விட்டார்கள்
அது முற்று முழுதாக பெண்ணுக்கு பிடித்ததா
கேள்விக் குறிதான்/ அந்தப் பிள்ளை மௌவுனம்
சாதித்தாள் அதை இவர்கள் மௌவுனம் சம்மதம் என்று
இரு பெற்றோரும் எண்ணி விட்டார்கள்
பின் பெண்ணின் அண்ணனும் அம்மாவும்
மாப்பிள்ளை வீட்டு சென்று
திருமண ஆயதங்கள் பற்றி முடிவுஎடுத்து வந்தார்கள் ,
அவர்கள் வீட்டுக்கு வந்தததும்
பெண்ணிடம் தாங்கள் சென்றது பேசியது எல்லாம் சொன்னார்கள்
ஆனால் அவள் மவுனமாய் இருந்து அழத் தொடங்கி விட்டாள்
தனக்கு இந்தக் கலியாணத்தில் இஸ்டமில்லை
தூக்கிப் போட்டாள் ஒரு வார்த்தை
எல்லோரும் கதி கலங்கி விட்டார்கள்
தீர ஆராயாமல் பெண்ணின் விருப்பம் சரியாகத் தெரியாமல்
அவள் மவுனத்தை சாட்சியாக வைத்துப் பேசிய கலியாணம்
பெற்றோரின் முகத்தில் கரியைப் பூசியது போல் ஆயிற்று
திருமணம் கடவுள் அருளால் நிச்சயிக்கப் படுவது
முதலில் பெண்ணின்விருப்பம் அறிந்து தான் திருமணம்
செய்ய முன்வர வேண்டும் ,
அந்த காலங்களில் பெற்றோர் விருப்பத்தில் திருமணம்
அன்று நடப்பது கட்டாயக் கலியாணம்,
இன்று பிள்ளைகளின் திருமணம் அவரவர் விருப்பத்தின் படி
செய்வது தான் உண்மையான திருமணம்
என்ன எப்படி பார்த்தாலும் வாழ வேண்டிவர்கள் அவர்களே
பெண் பிள்ளைகள் பூக்களைப் போன்றவர்கள்
அவர்களை பூக்களாக மென்மையாக வாழ விடுங்கள்
பெண்மையின் அழகே மென்மைதான்,

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Jan-16, 7:55 pm)
பார்வை : 193

மேலே