ஹைக்கூகள் சில

கதிர்வீச்சுத் தாங்காமல்
காலாவதியானது
----- சிட்டுக் குருவி இனம் .


என் தாய்வீடு ரிசர்வ் வங்கி
நான் புகுந்தவீடு அம்பானி
----- பணம்


கட்டிலில் கிடந்த வெட்கம்
தொட்டிலில் உறங்கும் சொர்க்கம்
------ குழந்தை .


ரத்தம் வரவில்லை ; ஆனால்
உட்புகுந்து யுத்தம் செய்திடும்
----- காதல்


வானமகள் அணிந்து கொண்டாள்
வண்ணப் பட்டாடை
----- வானவில்

தலைவரின் மரணம்
தொண்டர்களுக்குத் தீபாவளி
----- நிஜம் .

மின்சாரம் இல்லை ; பார்த்துக்
கைக் கொட்டிச் சிரித்தது
-------- மின்னல் .


நீர்' இன்றேல்
நீயும் இல்லை நிலத்தில்
----- அருவி


விண்ணுக்கும் மண்ணுக்கும்
தொடர்பை ஏற்பதும் பாலம்
------ விமானம்


ஒன்றோடு ஒன்று
ஒட்டிக் கொண்டு இருக்கிறது
---- உதடு


காலையில் குடிக்கும்
முதல் விஷம்
---- காபி

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Jan-16, 8:06 pm)
பார்வை : 109

மேலே