ஆறுமுகம் பாடுகிறான்
பாப்பானை பொங்க பொங்க
பால் பொங்க பொங்க
என்று குரல் எடுத்து
பாடுவான் ஆறுமுகம்
ஒவ்வொரு பொங்கலன்று
கரிய நிறம் தகதகக்க
நீண்ட நெடிய ஆறுமுகம்
பொங்கல் கவியை
மெட்டமைத்துப் பாடுவான்
ஆங்கே அப்போதே .
அவன் குரல் இன்றும் ஒலிக்க
அவன் மரணித்தப் போதிலும்
ஓங்கும் குரலிலே அவன் பாட்டு
பொங்கும் உணர்வுகளை நினைவில்
எதிரொலிக்கிறது நயமாக
அவனை மறந்தாலும்
பொங்கலன்று கண்கள் நிறைய
கண்ணீருடன் நினைவு அலைகள்
சடுதியில் தாக்க கேட்கிறேன்
ஆறுமுகத்தின் பாமரப் பாட்டை
வாழ்த்துக்கள் நல்குவது எளிது
மனம் ஒன்றி திசையெல்லாம்
பரந்து மணம் பரப்பி என்னை
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறான்
பெருங் குரலெடுத்து ஆறுமுகம்
இன்றும் மறு உலகிலிருந்து