விவசாயம்

கண்ணுக்கு எட்டிய தூரமெல்லம்
கழனிகள் இருந்தனவே!
பச்சை போர்வை படர்ந்திருக்கும்
பனிகளும் படுத்திருக்கும்!
மாலை தென்றல் மோதிவர
கதிர்கள் தலையசைத்து ஆடி வர!
நம் பசி தீர்க்க
நீ கால் வைத்தாய் கழனியிலே - உழவா!
ஏரையும் மாட்டையும் காணவில்லை
சேற்றையும் சோற்றையும் மறந்து விட்டோம்
உழவும் தொழிலும் எங்கே?
கிராமமும் மனிதனும் எங்கே?
மரமும் நிழலும் எங்கே?
வரப்பும் வாய்க்காலும் எங்கே?
நீரும் நிற்க வில்லை
வீடுகள் குடிகொண்டது அங்கே!
அரிசியும் பருப்பும் இறக்குமதி
டீயும் காபியும் ஏற்றுமதி!
முதல் தரமெல்லாம் வெளிநாடு!
மிஞ்சியதெல்லாம் உள்நாடு!
சாயம் போடும் சமுதாயம்
மழை வந்தால் வெளுத்துவிடும்!
இயற்கை எல்லாம் அழித்துவிட்டோம்
இதுதான் நம் நாகரிகம்!
முப்போகம் விளைந்ததெல்லாம்
மூணு மாடி ஆகிபோச்சு !
மூனு வேலை சோத்துக்கு கூட
இல்லையே விவசாயம்!
இயற்கை மாறி செயற்கை எல்லாம்
சாகடிக்குது விளைச்சலை !
மேல நாடு
கலாச்சாரம் கொல்லி வைக்கிது
உற்சாகம் !
கேள்வி கேட்கும் மக்களெல்லாம்
மது போதையில் உல்லாசம்!
நாட்டையும் விற்க போறோம்
சீக்கிரமே!
அழிஞ்சாதான்
அறிவு வரும் மக்களுக்கு!
விவசாயம் காப்போம்
வாழ்வை காபோம் !!!!!!!!!!!!!
------உதயா-----

எழுதியவர் : உதயா (16-Jan-16, 5:36 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 1782

மேலே