திருவள்ளுவர்

ஏலே பித்துக்குளி!

'ஏன்டா, திருவள்ளுவர்
தினமாமே? '

"உண்மையிலேயே
தமிழர்களுக்கெல்லாம்
தெய்வம் என்று
சொல்லலாம்!
7 வார்த்தைகளில்
எத்தனை எத்தனை
அறிவுரைகள்!
அகரத்தில் ஆரம்பித்து
' ன்' ல்முடித்த தமிழ்
வித்தையை நினைத்து
வியப்பதா?
இல்லை
தமிழ், கடவுள்,
என்ற சொல்லயே
1330 குறளிலும்
உபயோகிக்காமல்
உலகத்தனைவரும்
போற்றக்கூடிய ஓர்
உபநிக்ஷத்தை
கொடுத்த
வித்தையை
வியப்பதா?
கடவுளே தான்! "

'நன்னா சொன்னே..
ஒரு Joke கூட
வள்ளுவரை
தெரியாதவர்கள்
பற்றி சொல்லுவையே? '

" அதுவா சொல்றேன்
கேள்!

' இரண்டு பேர் தமிழர்கள்
சென்னைலே MTC Bus லே
எல்லா இடத்தையும் சுற்றி
பார்த்தார்கள்
ஒருவன் :ஏன்டா இது யாருடா,
எல்லா Bus லேயும் உட்கார்ந்து
இருக்கார்?
இன்னொருவன்:அவர்தான்டா
Bus Owner!
ஒருவன் :ஏன்டா, கையிலே எதையோவச்சு எழுதிண்டே
இருக்காரே? '
இன்னொறுவன் :அவர் கணக்கு வழக்கை அவரே தினமும்
எழுதிடுவாராம்!
ஒருவன் :பேக்ஷ் பேக்ஷ்
ஏன் சட்டைகூட
போட்டுக்கலே?
இன்னொறுவன்:பயங்கற
Loss லே ஓடிண்டுருக்காம்
Business!
ஒருவன் :ஏன்டா
தாடி வேறே
வளத்திண்டிருக்கார்?'
இன்னொறுவன்:ஏன்டா
தொன தொனங்கறே
அதான் Business Loss லே
ஓடிண்டிருக்குன்னு
சொன்னேன்லே
க்ஷவரத்திக்குகூட
காசில்லையாம்டா
வாயப்பொத்திண்டு
கம்மினு இருவே! "

" புரிஞ்சதோடா பித்துக்குளி? "

எழுதியவர் : (18-Jan-16, 8:27 am)
சேர்த்தது : ராஜா ஐயர்
பார்வை : 82

மேலே