ஹைக்கூ கவிதை

ஊற்றாகப் பொங்கி

வழிந்தோடுகிறது உணர்ச்சிகள்

கவிதையாய்



மழை மண்ணுடன்

உறவாடும்போதெல்லாம்

சாலைகளில் சரிகிறது மரங்கள்



கடலச்சார்ந்தே தன்

வாழ்க்கையை ஓட்டுகிறது

அலைகள்



சேதார சேதமில்லாமல்

சாதனை செய்வார்

நகைக்கடைக்காரர்



ஒன்றொடு ஒன்று

ஒட்டி மலையானது

மணல்



வெள்ளமாக புரண்டோடியது

ஏழையின் கண்ணீர்

மழை நீரை மீறி



உயர உயர பறந்தது

காய்கறி விலை

மழையால்



அலை அடித்த அடியில்

நுரை தள்ளியது

கடல்



விலகி விலகி நடந்தாலும்

துரத்தி துரத்தி தழுவுகிறது

அலைகள்



ஆற்றில் குளித்தது

சலசலப்போடு

தென்றல்



தண்ணீரில் கழுத்தளவு நின்று

சங்கீத சாதகம் செய்தது

தாமரை



பேரன்போடு ஏழை

மக்களை வாரி அணைத்தது

பெருமழை



கடைசி வரை இணையாமலேயே

ஊர் கொண்டு சேர்த்தது

தண்டவாளங்கள்



வெள்ளச் சேதம் அறிய

கட்சிகளுக்குள் போட்டி

அடுத்து வரும்தேர்தலால்



தன்னைத்தானே

சிறை வைத்துக்கொள்ளும் அதிசயம்

சிலந்தி





சரஸ்வதிராசேந்திரன் -

எழுதியவர் : சரஸ்வதிராசேந்திரன் (18-Jan-16, 7:32 pm)
சேர்த்தது : சதிரா
பார்வை : 249

மேலே