தன்னம்பிக்கை என்ற உளியெடுத்து
தன்னம்பிக்கை
என்ழ உளியெடுத்து
தன்னையே
செதுக்கிகொள்கிறாயே
ஊனமான சிற்பியே
ஊனமாய் பிந்திட்டாலும்
உண்மையாய்
இருப்பாய் நீயே
உன் நெறிமுறை வழுவா நெஞ்சில்
நேர்மையே வாழ்வுதானே
ஏழையாய பிந்திடினும்
ஏணியாய் உயர்வோம்
நாமே
ஊனமே வெறும்
காயம் தானே
உடலுமே வெறும்
காற்றடைத்த பையுந்தானே
உள்ளமே தன்னம்பிக்கை
உருவம் தானே
துன்பங்கள் சூழ்ந்த போதும்
சோதனைகள் வந்த போதும்
துவளாமல் வாழ்வோம் நாமே
உண்மைக்கோர் சாட்சி போல
உலகுக்கோர் எடுத்துக்கட்டாய்
என்றுமே வாழ்வோம் நாமே
காதுகேக்கா
பேசமுடியா
ஊனமே நானும் தானே