விபத்து

உற்சாக பயணம்
எதிர்பாரா விபத்து
மரணமே மிச்சம்

வாசல் காத்திருக்கும் அம்மா
வயோதிக அப்பா
வளையல் கேட்ட தங்கை
வசை கேட்கும் தம்பி

(வீட்டிற்கு இன்னும் எட்டவில்லை
செய்தி)

எட்டினால் அம்மாவிற்கு
ஆறுதல் சொல்லவும்

*இனிமே குடித்து விட்டு வண்டி ஓட்டமாட்டேன் அம்மா

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (19-Jan-16, 7:55 am)
Tanglish : vibathu
பார்வை : 56

மேலே