தூராமல் போகாதே
தூங்கா வானமே
தூரம் போகாதே
தாங்காமல் போகுமட்டும்
மழை தராமல் செல்லாதே
புல்லாங்குழலே
ஏதும் சொல்லாமல் மீளாதே
இல்லா அனலை அள்ளி
என் மேல் வீசாதே
என் வீதியில்
உன் கால் தடங்கள்
இல்லாமல் போகாதே
பூவே
தயக்கம் கொள்ளாதே
தேன்
சிந்தாமல் போகாதே
தினம் காய்ந்தாலும்
நிலவோ
கரையை தாண்டாதே
சட்டென
பனித்துளியும் ஏனோ
தீக் குளியல் கொள்ளுதே
குளிர் காற்றும் கூட
வெயிலாய் என்னை சுடுதே
வண்ணத் தென்றலே
நெருங்கி வா
உன் விழியால்
என் உயிரை நீ
அள்ளிச் செல்ல வா
நீ மௌனம் கலைத்தால்
என் பூமி வாழுமே
உன் மொழி
என்னை ஆளுமே
வான் வெளியில் பூக்களை
அது விதைத்துப் போகுமே
நேரம் நீளுதே
தாகம் தழும்புதே
என் வீரம் மயங்குதே
என் அந்தி வானம்
நிலவே உன்னை
சந்திக்க ஏங்குதே
தோகையே
உன்னிடம் தோற்கவே
என் எல்லாம் துடிக்குதே
என் கனவில் உன்னை
தினம் வைத்தே
எல்லாம் சொல்லும்
நிஐம் தேடுதே
சிறகை தந்து
சீக்கிரம் போகாதே
இன்னும் தூரம் போவோம்
என்று சொல்வேன்
தடுக்காதே
ஆடை கட்டிய
தங்க மீனாய்
என்முன்னே நகர்ந்தாயே
என் உயிரில் நான் நழுவி
உன் கடலில் கலந்தேனே