காதல் கணவர் கனவின் நினைவு

அழைத்து கைபிடித்து ஒரு பாதபயணம் செல்வோமா ? என்றார்,
அமைதியோடு அவர் பின்னே சென்றேன் ம்ம் என்று,
அவர் கைகோர்த்தபடி தோள் சாய்ந்தப்படி நேரம் செல்ல பயணம் தொடர,
அடர்ந்த காட்டின் வழி வந்தது,
அவரின் கையினை இறுக்கிபிடித்து பயத்தோடு கண்களை நோக்க,
அணைத்தபடி "அடி மௌனமே பார் ",

உன் கைபிடித்து நடந்த கிறக்கத்தில்,
உலகத்தினை மறந்தேன் இது வார்த்தை ஜாலமல்ல,
உன் கண்களாலே பார்,
உலகை மறந்து,பாதை மறந்து இங்கு உள்ளேன்,

பயம் வேண்டாம் உள் செல்வோம்,
பாதுகாவலர் இருப்பார் வழிகேட்போம் என்றார்,
பாதை அது நீண்ட பாதை,
பாதையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்கள்,
பாடும் அகவைகளும்,பறவைகளும் மரங்களிலே,
பயணம் செல்ல செல்ல இனிமையானது,

சட்டென்று நின்றார் என் காதல் மயக்கதிலிருந்து விழிதிறந்தேன்,
சில்லென்று சாரல் என் மீதுமோத,
சலசலவென நீரோட்டம் என் கண்முன்னே,
சிறுபிள்ளையென வயதினையும் மறந்து,
சிரிப்போடு துள்ளி மகிழ்ந்தேன்,

குழந்தைப்போல வாழ்வதே பெரும் பரிசு தானே,
கோபமும்,சோகமும் நிலையில்லை,
கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமே,

வீழ்ச்சியுற்றாலும் எழுந்து நடக்கும்,
வினை அது விதைகாதே,
வியந்து வனத்தினை நான் ரசிக்க,
வனம் இது மிகவும் பழக்கமான வனம் தான்,
வழிமாறியதாய் உன்னிடம் விளையாடினேன்,
வாய்திறவாது பேசும் உன் மௌனத்தின் அழகை தனிமையில் காண,
வாய்ப்பொன்றை தேடினேன் என்று அவர் சொல்ல,
வார்த்தை பேசாது என்றும் நான் பார்க்கும் பார்வை,
வெளிப்படுத்தாத எண்ணங்களால் உமக்கு,
கோபம் வரவில்லையா ? என்றேன்,

மழலை அது பேசும் மொழியாய்,
மலரே நீ பேசும் சில வார்த்தையே,
மண்ணில் விழும் ஒரு துளி மழையினால்,
முளைக்கும் தளிர்ப்போல,
மகிழ்ச்சியில் ஆழ்த்தி மனதினை நிறைக்குதடி,

அழகான வாழ்க்கை அது மலர்ந்தது,
அமைதியான உன் முகத்தினை பார்க்க,

பாறைகளும் பஞ்சு மெத்தையானது,
பார்வை அதில் நீ பேச,என்றார்,
பனி விழ தொடங்கியது,
பாதை வழியே வீடு சென்றோம்,
பசுமையான நினைவுகளுடன் !!!

எழுதியவர் : ச.அருள் (19-Jan-16, 6:45 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 260

மேலே