காதலின் தேர்தல்
![](https://eluthu.com/images/loading.gif)
சிந்தனை இளமையோடிருந்தால்
சிகையில் கருமை குடியிருக்கும்
சிந்தனை ஞானம் பேசினால்
மீசை வெளுத்துவிடும்
அப்போது அவள் அருகில் வந்தால்
மீசை கட்சி மாறி கருமை ஆகிவிடும்
இது காதலின் தேர்தல்
கவிஞனின் பாடல் !
----கவின் சாரலன்