ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் நான் 555

என்னவளே...

தினம் நீ போகும் போதும்
வரும்போதும்...

உன்னை ஒருமுறையாவது
பார்க்க வேண்டும் என்று...

என் விழிகள் பசியோடு
காத்துகொண்டு இருகின்றன...

தினம் நீ நடந்து செல்லும்
பாதையோரம்...

தலை நிமிராமல் ஓரகண்ணால்
பார்த்துவிட்டுத்தான் போகிறாய்...

நீ பார்க்கும்வரை படபடுத்த
என் இதயம் நின்றதடி நிமிடம்...

உன் ஓரபார்வையை
ஒருநாள் நிறுத்திவிட்டு...

அமைதியான ஒருபார்வை
என்மீது செலுத்திவிடு...

அடுத்த வினாடி உன்னருகில்
நான் இருப்பேன்...

ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு
நான் காத்திருக்கிறேன்...

உனக்காக சாலையோரம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jan-16, 9:12 pm)
பார்வை : 407

மேலே