தித்திப்பான உணர்வே

தித்திப்பான உணர்வே !

காதலியை கண்ணெதிரே வைத்து
கனவு காண்கின்றான் !
காதலனை எதிரே வைத்தே
இன்பம் காணுகின்றாள் !


இருப்பது அருகருகே என்றாலும்
இன்பவானில் பறக்கின்றனர்
பெறுவதில்… கொடுப்பதில் ஆனந்தம்
சுயநலம் அங்கே ஏதுமில்லை !

வானம் என்பதும் புரியவில்லை !
வந்து காண்போரும் தெரியவில்லை !
மோன தவத்தின் முனிவர்போல
மகிழ்ச்சியில் மூழ்கி குளித்தனரே !

கானம் எதுவும் கேட்கவில்லை
கண்கள் இருந்தும் காணவில்லை
தேன்ஈந்தும் திகட்டவில்லை !
தித்திப்பான உணர்வே காதலாகும் !

------ கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Jan-16, 9:33 pm)
பார்வை : 84

மேலே