சலாவு 55 கவிதைகள்

பெண்ணே,
உன் தலை எழுத்தையும்
விதியையும் நம்பும் உனக்கு
என் கண் பார்வையும் மௌன மொழியும்
புரியவில்லையா ?

உன் இமைகளின் நாட்டியம்
இந்த உலகினில் நான் காணாத
புதுமை ஜாதி கோலம்.
உன் விழிகளின் மொழிகளில்
அர்த்தங்கள் கோடான கோடி
அந்த கோடிகளில் ஒருத்தியான உன்னை
நான் எங்கு செல்வேன் தேடி .

என்னை அழ வைத்து
நீ சிரிக்கும் இந்த விளையாட்டு தான்
உனக்கு பிடிக்குமென்றால்
என் வாழ்நாள் வரை
அழுது கொண்டே இருப்பேன்
உன்னை சிரிக்க வைக்க .

என் உயிருக்கும் உணர்வுக்கும்
நடுவே போராட்டம் உன் அன்பு
என் கண்களுக்கும் இதயத்திற்கும்
நடுவே ஏமாற்றம் உன் காதல்
உனக்கும் எனக்கும்
நடுவே தடங்கல் நம் பிரிவு
என் கனவிற்கும் வாழ்க்கைக்கும்
நடுவே முடிவு என் மரணம்.

உன் அன்பிற்கு
அடிமையான
இதயம் ஒன்று
துடிக்க மறந்த
நிலை இங்கு
நேற்று இன்று நாளை
இல்லை
உன் சுவாசம் என்னை
சேரும் வரை .
...................................சலா,

எழுதியவர் : சலாவு இப்ராஹிம் (19-Jan-16, 9:59 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 55

மேலே