சகோதரத்துவம்

ஓடை கரையோரம் ஓட்டை குடிசையிலே
ஒழுகின்ற மழை நீரை போட்டி போட்டுக்கொண்டு
பாத்திரத்தில் நிரப்பும் சகோதரர்கள்......
வீட்டுக்கு வெளியே விருந்தாளி தவளைகள் குரலிசைய்க்க
அக்கறையோடு எட்டிப்பார்த்தான் தம்பிக்காரன்.....
சாரை பாம்பு ஒன்று இங்கு வர
விருந்தாளி படைகள் சிதறி சென்றன...
அனுபவ போர் வீரன் போல் சின்ன தவளை
பாம்பை எதிர்த்து நிற்க அகப்பட்டான் அதன் வாய்க்குள்....
பொறுக்காமல் பாம்பு குதத்ியை அதன் வயிற்றில் சொருகினான் தம்பிக்காரன்...
என்ன ஆகுமோ என தடியை தூக்கி கொண்டு அண்ணன் பின் வர
அவனைப்போலவே அங்கு வந்தது அடிபட்ட பாம்பின் சகோதர பாம்பு.....

எழுதியவர் : மா.யுவராஜ் (20-Jan-16, 5:05 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 337

மேலே