சுவை மண்டி போனோம்

மணற்படுகையினில் மரணித்தன மௌனங்கள்...

இருதயத்தின் கள்ள தனங்கள் கரை ஒதுங்கிய நேரமது....

மேற்க்கு மூலையிலே பொத்தென குதித்தான் செம்பிழம்பில் செழித்தவன்..

சவ வானத்திலே .......அவன் சாயங்களால் மேகங்கள் மெருகேறின....

அனிவித்தவிழ்க்கும் செந்தூர ஆடை கட்டின...

அந்நேரமதில் நானும், நானலும் ....
ஆடி,ஆடி ..தலை முட்டி எங்கள் இரணங்கள் தீர்த்தோம்...

மாலையின் சுவர்ணங்கள் சூழ அச்சொட்டு நாள் சுவை மண்டி போனோம்....

நான் மனித குலத்தின் மகராசன் அன்றெல்லாம்..

கர்வம் மொய்க்கும் காட்ச்சிகளால்,கசிந்தொழுகும் பனி தூசிகளால் சரிந்தோம்......
பொத்தென வீழ்ந்தோம் கிழக்கின் மூலையிலே...

எழுதியவர் : சிவசங்கர்.சி (21-Jan-16, 9:26 am)
Tanglish : suvai manadi ponom
பார்வை : 88

மேலே