ஒரு விளையாட்டுப் பொம்மையாக

சிட்டுக் குருவி என்னுடயை சாளரத்தில்
வந்து அமர
எதோ சேதி சொல் வந்திருக்கிறதோ
என்று நான் எண்ண
அது என்னை சற்றுக் கூட கண்டு
கொள்ளவில்லை

ஆற அமர அது அழகாக தன்னை
நிறுத்திக் கொள்ள
எதோ காரணமாகத் தான் வந்திருக்கிறது
என்று நான் கருத
அது என்னை சற்றுக் கூட கண்டு
கொள்ளவில்லை .


தன அலககால் சாளரக் கட்டையை
இடை விடாமல் கொத்த
ஏதடா இது வம்ப்பாகிப் போனதே
என்று நான் பதற
அது என்னை சற்றுக் கூட கண்டு
கொள்ளவில்லை,

தேக்கு மரத்தி லான கட்டையும் பொல பொலவென்று
கிழே கொட்ட
ஏய், ஏய், என்று விரட்டி அடிக்கும் முயற்சியாக
கூப்பாடு போட
அது என்னை சற்றுக் கூட கண்டு
கொள்ளவில்லை..


ஒரு குருவியுடன் போட்டி மிக வேகமாக
நான் நடத்த
என்னுடைய மகன் சற்று தூரத்திலிருந்து
வேடிக்கைப் பார்க்கிறான்
சிட்டுக் குருவிக்கும் குட்டிச் சிறுவனுக்கும் நான்
ஒரு விளையாட்டுப் பொம்மையாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (21-Jan-16, 10:54 am)
பார்வை : 64

மேலே