நாங்கள்

நாங்கள் ....
அடையாளமற்றவர்களின்
அடையாளம்

ஆண்பாலா ? பெண்பாலா ?
என்ற குழப்பத்தில்
அ:.றிணை ஆக்கப்பட்ட
ஆறறிவு ஜீவன்கள்

எப்போதுமே
தொடங்கப்படாத
முடிந்த கதை .

எப்போதாவது
மேற்கோளாக்கப்படும்
முற்றுப் புள்ளி

விதைத்தவர்களே
களை எனச் சொல்லும்
விடுகதைகள்

பட்டுப் பூச்சியாகும்
தருணங்களில்
இறகிழக்கும் சாபதாரிகள்

வரலாறு -
ஏதோவோர்
மாலிக்காபூரை மட்டும்
மறதியாய் பதிந்தது

மற்றபடி
அந்தபுரங்களில் தான்
எங்களின் ஆயுள் .

எங்களின் பயணங்கள்
யாவையும்
எங்களுக்குள்தான்


ஆனால்
திசைகளை மட்டும்
தீர்மானிக்கத் தெரிவதில்லை
இறுதிவரை .





.

எழுதியவர் : (21-Jan-16, 2:26 pm)
Tanglish : naangal
பார்வை : 72

மேலே