நட்பை சொல்ல வேண்டுவதில்லை

மழலையாய் விவரமறியா பருவத்தில்
என்னோடு பழக தொடங்கிய
நண்பருள் ஒருவன் நீயல்ல..!

மாலை நேர வேளையிலே
குறும்புகளோடு சண்டைபோட்ட
பக்கத்துவீட்டு
தோழனுள் ஒருவன் நீயல்ல..!

டைரியில் ஆட்டோகிராப் என
தொலைந்துபோன
நண்பருள் ஒருவன் நீயல்ல..!

வாழ்க்கை பாடத்தை புரியும் வேளையில்
கிடைத்த என் இனிய நட்பே..!

நிழல் இல்லா நிஜ வாழ்வை
புரிய வைத்தாய்..!

கேலி சிரிப்புகளுக்கான நட்பு வட்டத்தில்
சிந்திக்க வைத்தாய்..!

உன்னை, உயிர்தோழன் என்றதில்லை நான்...

ஏனென்றால்,
நட்பை சொல்ல வேண்டியதில்லை..!!!
காதலைப்போல.....

எழுதியவர் : ஷாமினி குமார் (21-Jan-16, 10:03 pm)
பார்வை : 1082

மேலே