அழகாய் வகுத்தன
அழகாய் வகுத்தன
ஆர்தான் கற்றுக் கொடுத்தனரோ ?
ஆர்தான் கற்றுக் கொடுத்தனரோ ?
அழகாய் வகுத்தன பாதையை
அணியணியாய் செல்கின்றதே!
எடைதான் கூடுதலென்றாலுமே
இழுத்து செல்வதில் ஒற்றுமையே
ஆர்தான் கற்றுக் கொடுத்தனரோ ?
காலத்தைக் கச்சிதமாய் கணிக்கிறதே
கணக்காய் உணவை சேமிக்கிறதே
ஆர்தான் கற்றுக் கொடுத்தனரோ ?
பார்க்கத்தான் சிறிதே என்றாலும்
படிப்பினை தானே நமக்கெல்லாம்
ஆர்தான் கற்றுக் கொடுத்தனரோ ?
அதன்பேர் எறும்பென்று சொல்வோமே!
---- கே. அசோகன்.