மழலையும் ரோஜாவும்

மழலையும்…..ரோஜாவும் !

அன்றலர்ந்த ரோஜா
அழகாய் இருந்தன !
அன்றலர்ந்த ரோஜாவாய்…
அழகாய் சிரித்தது மழலை !

மெத்தென இருக்கும் பட்டு
மேனியில் பட்டால் சுகமே!
மெத்தென மழலைப் பாதம்
மேனியில் உதைத்தால் சுகமே!

பன்னீரைத் தெளித்தது ரோஜா
பன்னீரின் வாசத்தில் மயக்கம்
பால்வடி மழலையின் எச்சிலோ
பன்னீராய் தெளித்தால் மயக்கம்!

ரோஜாவைப் பார்க்கும் போதே
உடலெங்கும் ஓடுதே துடிப்பு
மயக்கிடும் மழலையைக் கண்டாலே
மனதெங்கும் நிறையுதே உயிர்ப்பு!

எழிலான ரோஜாவும் புதிதுதான்
இன்ப மழலையும் இனிய புதினம்தான்
செழிப்பான கன்னத்தில் ஈவோமே!
சொர்க்கத்தின் சுகம்தன்னை காண்போமே!

------ கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (21-Jan-16, 10:03 pm)
பார்வை : 121

மேலே