மலர் ஓடை நட்சத்திரம்

ஒளிவருடங்களுக்கு அப்பால்
நின்று ஒளிரும்
இந்த நட்சத்திரங்களின்
எண்ணிக்கை எத்தனை !
என் நெஞ்சினில் தூவிடும் இவைகளின்
எண்ணச் சிதறல்கள்தான் எத்தனை !

ஓ அழகிய ரோஜாவே
உன்னைச் சூழ்ந்திருக்கும்
முட்கள்தான் எத்தனை !
அழகின் காவலோ ?
கவிஞன் நான்
தொடவும் தடையோ ?

ஓ அழகிய நீரோடையே
கவிஞன் நான் வரும் போது
ஆனந்தத்தில் துள்ளி வருவதேனோ
நான் நன்றி சொல்வேன் உனக்கு
தாகம் தணித்ததற்கு இல்லை
தாளம் மாறாமல் ஓடி
என்னை பாட வைக்கிறாயே அதற்கு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-16, 5:51 pm)
பார்வை : 438

மேலே