எனக்காக பிறந்தவளா 4

Episode 4: எனக்காக பிறந்தவளா ???

ஆமா மைதிலி நீ தான் என் உலகம் என்று சொல்ல தோனியது .

ஆனால் "Hm" என்று நிறுத்திக்கொண்டான் .

"வசந்த் எனக்கு தூக்கம் வருது "அவன் உள்ளம் போதுமான அளவில் நனைந்ததால் .

" சரி டியர், போ நல்லா தூங்கு "என்று மிருதுவாக சொல்லி தன் sony xperia-வுக்கு ஒரு முத்தம் இட்டான் . அவள் எதிர்முனையில் இனைப்பை துடித்திருந்தாள் . வசந்த் தூக்கமற்று அவளை நினைத்து உருக துவங்கினான் .

அவனுக்கு தூக்கம் வரப்போவதும் இல்லை . தூக்கம் வந்தாலும் அவனுக்கு அதில் விருப்பம் இல்லை . அவள் நினைவுகள் எத்தகைய இனியது . தூக்கம் அவன் கண்களை அழைக்க தூங்கிபோனான் . அவன் நினைவில் அவனுக்கு தெரியாமல் ஒரு கனவில், ஒரு இரவு மரதடி நிழலில் தொலைவில் சூரிய ஒளி வீசுகிறது, ஒரு பெண்ணின் நிழல் உருவம் தனியாக தெரிந்தது . வச்ந்த் அவளின் முகம் காண நடந்து போகிறான் . அவள் கூந்தல் தூரத்தில் நடனம் ஆடுகிறது . அவள் முதுகு ஆழகாக இருந்தது .அவள் தோல்மீது கை தொடுகிறான் . அ
வள் திரும்பி பார்க்கிறாள் எத்தனை அழகு அந்த பெண்ணில் . அவள் மைதிலி தான், இல்லை, வேற யார் அவள் கொஞ்சம் புதுமையாக இருந்தது .

"ஏன் வசந்த் நான் வேணாவ உனக்கு ?"

" நீ வேணும் " என்று அவள் கை பிடித்தான் .

"போ நான் உன்ன நம்பமாட்டே, நீ மைதிலிய காதல் செய்யுற என்ன இல்ல "

வசந்த் : ஆமா, மைதிலி தான் என் காதல், அவள நான் அதிகமா நேசிக்குற, அவ எனக்காகவே பிறந்தவ, என்னோட காதல் இவ்ளோ அவ்ளோனு என்னால சொல்ல முடியாது ! ஏன்னா அதுக்கு அளவே இல்ல . அவ . . "

"போதும் வசந்த் you are cheat "

" நான் என்ன பண்ண ?"

" Daily உன் கனவுல எப்பவும் நான் தானே வருவ ! இப்ப நீ என்ன நினைகவே மாட்ற, எப்பவும் உனக்கு மைதிலி தான் "
அவன் உயிர் அம்சமாக இருந்தாள் . அந்த பெண் பேசிக்கொண்டே வசந்தின் கைகளை பிடித்தாள் . அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .

" வசந்த் " என்று அவன் கைகளில் முத்தம் தருகிறாள் . அவன் கண்ணத்தை இதமாக வருடுகிறாள் . காற்று பக்கத்தில் சில்லென்றது .

அவள் வசந்தின் மார்ப்பின் மீது மிருத்துவாக சாய்ந்து அவனை இருக்குகிறாள் .

அவன் வேகமாக படுக்கையிலிருந்து கீழேவிழுகிறான் .

சே ! கனவு ! மைதிலி கனவுல கூட உனக்கு தூரோகம் செய்ய தோனல,அப்படி நீ என்ன பண்ண என்ன, இல்ல இதான் காதலா, ரொம்ப புதுசா இருக்கு இந்த feel, I Love you I Love you என்று கண்ணாடி முன் நின்று சில முறை சொல்லி பார்த்துக் கொண்டான் .

படுத்துக்கொண்டு சொல்லி பார்த்தான் பலமுறை . காதல் வானத்தை தொட்டது சிரித்தான், தலைக்கானியை கட்டி பிடித்தான் காரணமில்லாமல் அசிங்கமாக இருந்தது அவனுக்கு அந்த செயல் . மறுபடியும் ஏழுந்து அறையில் இருமுறை நடந்தான் . நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்த tube - விளக்கையும் lobtop-ஐயும் தட்டி ஏழுப்பினான் google-ல காதல் கவிதை படிக்க தோனியது .

Network slow . அவன் அசைகளை கேடுத்தது .

அவன் வழக்கமான காலை இன்று அவன் காதலியின் நினைவுகளுடன் வந்தது . நல்ல shirt -ஐ எடுத்து வைக்க நினைத்தான் . shirt- அவன் ஆசைகளை பழிவாங்க எதோ சுமாரக இருக்கும் shirt-ஐ தேர்வு செய்தான் . இம்முறை கூடுதல் cream-ஐயும் sent-ஐயும் போட்டுக்கொண்டு நந்தினி fancy க்கு காதலோடு நடந்தான் . கடையில் மைதிலி இல்லை என்பது அந்த குட்டி அறை வெளிச்சமாக காட்டியது குமாரை .அவன் கடைக்குள் நுழைவதை பற்றின யோசனையை அடியோடு மறுத்தான் . எதிரில் ஒரு flash பிரம்மித்தா,சிரித்தான்,மகிழ்ந்தான் அவள் மைதிலி எதிரில் மெல்லிய சிரிப்புடன் பார்த்துக்கொண்டே வருகிறாள் . இன்று அவன் உள்ளம் 2000 ரூபாய்க்கு topup செய்து கொண்டது அவள் புன்னகையில் .

" ஹாய் வசந்த் " என்று அவள் சொல்வா பதில் என்ன சொல்வது என்று யோசித்தான் .

" ஹாய் கனேஷ் " என்றால்

" ஹாய் மைதி,today you looking nice yar "

" நீயும் கலக்குற கனேஷ் shirt super ah இருக்கு "

"is it,how is my new glass "

" ரொம்ப costly ah இருக்கும் போல இருக்கு "

" ஆமா, US இருந்து dad வங்கிட்டு வந்தாரு மைதி "

வசந்திற்க்கு எரிச்சலாக இருந்தது. " உண்மைய சொல்லு மைத்து சகிக்கலனு " வசந்த் mind voice .
.
" Hm உன் face க்கு set ஆகல கனேஷ் .

" I have other one " என்று பல் இளித்தான் .

" என்னது உன் முஞ்சியா " என்று அவள் கேட்டது வசந்திற்க்கு அதிகம் சிரிப்பை தந்தது .

" what மைதி ?"

" Nothing கனேஷ் " கடைக்கு time கிடுச்சு .

அவளின் அடுத்த பார்வை அவனை பார்த்தது அவனுக்கு பிடித்து இருந்தது .

" என்ன வசந்த் கோவமா இருக்க போல "

" ஆமா யார் அவன் கரடிக்கு low hip போட்ட மாறி"

" Owner ஒட relation "

"ஹ்ம்ம்"

" வசந்த் எதோ born ஆகுற மாறி இல்ல "

" அது எனோட stomach தா"

" அச்சசோ ! என்ன ஆச்சு வசந்த் "

" அடி வயிதுல iron box வெச்சுட்டு எரியுதானு கேக்காத "

" சரி சரி,feel பண்ணாத வசந்த் i understand "

" Hm, என் dialoge ah அவன் பேசிடான் அதா பா "

மைதிலி : என்னனு
வசந்த் : இன்னிக்கு நீ ரொம்ப அழக இருக்க "
மைதிலி : போதும் போதும் காலங்காதல fans தொல்ல தொங்கல பா "

இந்த குறும்பு தனம் தான் பெண்னே என்னில் இத்தனை காதல் உட்டியது என்று அவன் முதல் காதல் கவிதையை தனக்குள் சொலிக்கொண்டான்.

மைதிலி : என்ன யோசன?

I love you என்று செய்கை செய்து சிரித்தான் . மைதிலியும் அவன் செய்வதை கண்டு புன்னகைத்தாள் .

வசந்த் : மைதிலி இந்த உனக்காக வாங்கினு வந்த " என்று அவன் கையில் இருந்த விலை உயர்ந்த இனிப்பு ஒன்றை நீட்டினான் .
மைதிலி : என்ன வசந்த் இது .
வசந்த் : chocolate
மைதிலி : ப்ச் ! எனக்கு இது பிடிக்காது வசந்த் . எனக்கு குச்சிமிட்டாய் தான் பிடிக்கும், but ok adjust பண்ணிக்குற
என்றாள் மறுபடியும் குறும்பு தனமாக . அதை வாங்கும் போது அவள் விரல்பட்டது இன்பமாக இருந்தது . அவன் இன்பத்தை அனுபவீக்கும் தருணத்தில் அவள் நழுவி கடைக்குல் சென்றுவிட்டாள்.

அவனுக்குள் அவள் அதிசயமாக தெரிந்தாள் .இந்த பெண்ணிடம் எத்தனை குணங்கள் அவை அனைத்தும் தன் ஒருவனுக்கே சொந்தம் என்று தான் பின் தலையை தடவிக் கொண்டு நடந்தான் .

எழுதியவர் : kavi Tamil Nishanth (22-Jan-16, 11:40 am)
பார்வை : 180

மேலே