எழுத்து 22-01-2016 ===காதலைக் காட்டினான் கழல்களில் கவிமலர்======

===காதலைக் காட்டினான் கழல்களில் கவிமலர்!======

புதிதாய்ப் பள்ளிமுன் பொய்,நின்ற போது
புதிராய்த் தெரிந்தது போல,நீ வந்தாய்!
எதிரே நின்ற ஆசிரி யைமுன்
எதற்கென விளங்கா மிரட்சியில் நானும்!
பகலவன் எழவும் அகலும்,அவ் விருள் போல்
பழகப் பழகப் புரிந்திடும் ஓவியப்
படத்தினைப் போல்,மனக் கிடக்கையில் அமர்ந்தாய்!
படப்படக் குளிரும் சந்தனம் எனவே
இரவும் பகலும்,உன் நினைவினில் நனைவேன்
எப்படி உந்தன் அழகினைப் புகழ்வேன்!
உண்மையில் நிலவோ உனக்கிலை உவமை!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலைமை!
ஓடையின் நீரிலே ஒடுங்காத் தாகம்
உனதுமெய் யன்பிலே ஓடியே போகும்!
காற்றில்,உன் கூந்தல் களி,நடம் கண்டே
தேற்றுவேன் மார்பினில் தவழுவாய் என்றே!
காதலோ டுன்னையும் கருணையின் காட்டினான்
கழல்களில் காளியும் கவிமலர் சூட்டுவேன்!
==== ======

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (22-Jan-16, 7:34 pm)
பார்வை : 97

மேலே