அவளை பற்றிய குறிப்புகள்

நாத்திகம் பேசியவன்
ஆத்திகன் ஆனேன்
தேவதை உன்னை சந்தித்தபின்

தேவதைகளின் தேசிய நிறம்
வெள்ளை - ஆயினும்
உன்னை நான் முதன்முதலாக
சந்தித்தது பிங்க் நிறத்தில்தான்
பிங்கையும் பிடிக்க வைத்தாய்
அன்றுமுதல் நீ

பொதுவாய் தேவதைகள்
ஆசிர்வதிக்கும்
ஆனால் உன் பார்வையோ
என்னை சாகடிக்கும்

உன் வாழ்த்திற்காக காத்திருந்து
கிடைக்க பெறாமல்...
ஒவ்வொரு முறையும் சாகிறேன்
என் பிறந்த நாளன்று - ஆயினும்
மீண்டும் பிறக்கிறேன்
ஒரு குருட்டு நம்பிக்கையில்
என்றாவது ஒருநாள்
அது கிடைக்க பெறுமென்று...

எழுதியவர் : Karuppiah (13-Jun-11, 10:43 pm)
சேர்த்தது : Karuppiah
பார்வை : 414

மேலே