24-01-2016 ===நினைவெல்லாம் கவிதையே===

அன்னங்களா உன் கண்கள்?
கன்னக் கோல்களே
காணவில்லை என்மனதை!
---
மாதங்களில் மார்கழி நான்
கண்ணன் சொன்னான்!
ஆதங்கம் எனக்குள்
அவன்மட்டும் தானா?!
---
கண்விழி பார்த்தேன்
கலங்கினேன் நேற்று!
மண்வழி போகிறேன்
மறுத்த,சொல் கேட்டு!
---
ஏத்திவிட்டார்கள்
நம் காதலை
கொல்லைப்பொம்மையாக!
--
ஆட்சி உனதே
வீழ்ச்சி எனதே
குடித்ததுன் பேரழகை!
குடியாட்சியாம்
கூறுது உலகு!
===
காதலெனும் பட்டாம்பூச்சி
கை,நீட்டினேன் பிடிக்க
கவிதை வண்ணங்கள் கையில்!
---
கண்ணுக்குள் நுழைந்தாள்
நெஞ்சுக்குள் எதிர்பார்த்தேன்
நெற்றியில் ஏறினாள்
நினைவெல்லாம் கவிதையே!
---

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (24-Jan-16, 7:47 pm)
பார்வை : 248

மேலே