தொலைந்து போன கடிதம்
Follow Us
Dinamani
Monday, January 25, 2016
இ-பேப்பர்
dinamani-epaper
முகப்பு > கவிதைமணி
தொலைந்து போன கடிதம்: ஹாஜா மொஹினுதீன்
By dn, இரவாஞ்சேரி
First Published : 25 January 2016 08:58 AM IST
பக்திக்கு அடுத்த வரியில்
பதிய வைக்கும் ;
ஒற்றை வார்த்தை ;
எழுதாத விரல்களும் உள்ளதா ?
"நலம் நலமறிய ஆவல் " !
காதல் பூக்களை
கவிதையாய் கொட்டும்
கடிதம் எங்கே ?
வறண்ட காலங்களை
வசந்த காலங்களாய் மாற்ற வரும்
கடிதம் எங்கே ?
சைக்கிள் மணி ஓசையையும் !
சலங்கை (கொலுசு ) மணி ஓசை மிஞ்சுமே !
சந்து எல்லை நோக்குமே !
சமாதானம் அடையுமே !
கையில் கிடைக்கும்
கடிதத்தால் !
கவலை மறந்து பறக்குமே !
மறைத்து வைத்து படிக்குமே !
நினைத்தபோதும் படிக்குமே !
நெஞ்சை விட்டு நீங்காமல் !
நெஞ்சுக்குழியில் நிற்குமே !
உதடுகள் தீண்டாமல்
உள்ளங்கள் நனையும்
உன்னத வரிகளும்
கடிதங்கள் காட்டுமே !
துயரம் மறந்து சிரித்ததும் ;
துணைக்கால் சேர்த்து வந்ததால் ;
"பல் வலியும்" மாறின
"பால் வாளியாய்" மாறியதால் !
தொலை தொடர்பு வளர்சியால்
"தொலைந்து போன கடிதமே"
கண்ணீரில் வாடினேன் !
கவலைகொண்டு தேடினேன் !