காதலின் சங்கமம்

சின்னச் சின்ன அடி எடுத்து வைக்கையிலே
தோன்றவில்லை உன்னைத்தான் ......
அன்று நான் மடையன் ஆகிவிட்டேன்
பிஞ்சு மனம் கொள்ளை கொண்டது உன்னை

நீயும் நானும் வளர வளர பிஞ்சு மனதில்
பாசம் பிறந்ததடி ஏன்/ அந்தப் பாசம்
உன்னிடத்தில் எனக்கு புரியவில்லை
இன்று வரை வளர விட்டேன்

உன்னைக் கரம் பிடித்த நாள் முதல் காதலிக்க நினைத்தேன்
ஆனால் அன்றே ஏமாற்றம் தந்து சென்றாய்
இன்றும் உன் வரவை எட்டி எட்டி பார்த்து
ஏங்கி நிற்கும் என் நிலைமை....

நீ மறந்தாயோ/ உன்னை என் இரண்டு சில்லு வண்டியில்
உட்கார வைத்து ஓட்டி செல்லும் போது
எனது கால் சிலிப்பாகி இருவரும் கீழே விழுந்து விட்டோம்
அப்போது என் காலிலும் கையிலும் அடிபட்டதை
நீ பார்த்தவுடன் பதறிப் போய்விட்டாய்
நீ கண் கலங்கியதை பார்த்தேன்

ஆனால் இன்று என் கண்கள் கலங்குவதை பார்க்கலையோ
உன் மனம் இப்போ கல்லாகி விட்டதா
கற்சிலைக்கும் கருணை உண்டு தெய்வீக சாயலில்
கல்லான உன் மனதில் நான் இல்லையா
உன் நினைவில் நீ என்னை காணவில்லையா
கனிவோ கருணையோ எட்டவில்லையா

போடி போய்விடு மரத்துப் போய் விட்ட உன் காதல்
மீண்டும் துளிர் பெற்று வரும் போது
நான் இருப்பேனோ என் பெயர்தான் பதியப் பட்டிருக்குமோ
அன்று அழுதாலும் புரண்டாலும்
உன்னை எண்ணி துக்கப் பட யாரும் இல்லை உனக்கு
அன்று நீ எழுதி விடு உன் கண்ணீரால்
இவன் ஓர் பைத்தியக்காரன் என்று
உன் காதல் என் கல்லறையில் சங்கமம்

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Jan-16, 10:53 am)
பார்வை : 74

மேலே