உளியில் செதுக்கிய விழிகள்
அறம் பொருள் இன்பமெனும் அமுதூட்டி
உரமிட்டு வளர்த்த செந்தமிழ்!
பரம்பொருளே உலகின் முதற்றென்றது -அன்று
சிரம் கவிழ்ந்து பணத்தின் பாதத்தில் இன்று
திறம்பட உழைத்து வியர்வைதுளியில் குளித்து
தரமான உணவுண்டு உடல் வளர்த்தது -அன்று
கரம்பல கோர்த்து பெற்ற சுதந்திரம்
மறம் மறந்து அந்நிய மோகத்தில் இன்று
பெண்மை காக்க பிறந்த பாரதி!
பசுமைகாண வாடிய வள்ளலார்
தொன்மை பலகண்ட தமி ழினம் -அன்று
அண்மைகாலமாய் அரிச்சுவடு அழிந்திடுமோ! அச்சத்திலின்று!
ஈழத்திலும் இந்திய தேசத்திலும்
கோலோச்ச வேண்டிய முதுமொழி!
பற்பல நாகரீகங்களை தந்த பழமொழி -அன்று
தன்சந்ததியே தன்சதையை திண்றிடகண்டு அழுகிறதின்று!
புதியதோர் உலகம் படைப்போம்! -அதில்
வானவீதியில் வழிகள் அமைப்போம்!
பரந்த உலகில் செந்தமிழை விதைப்போம் -அதற்கு
ஒற்றுமை உறுதுணையை உரமாய் கொடுப்போம்!!