ஒற்றைச் சொல்
ஒற்றைச் சொல் !
ஓற்றை ரோஜாதான்
இதழோர புன்னகைதான்
சற்றே வெட்கம்தான்
கற்றைக் குழலோரம்
காதினில் தொங்கட்டன்தான்!
கண்ணுக்கினியாளின்
கண்ணோர பார்வைக்கும்
செவ்விதழோரம் சிந்தும்
ஒற்றைச் சொல்லுக்குத்தான்
காலமெல்லாம்….
காத்து கிடப்பேனே …!
இதயத்தில் ஒளித்து வைத்த
ஒற்றைச் சொல்லை…
உதிர்த்து விடு
உயிர் வாழ்வதற்கே !
ஒற்றைச் சொல் என்னவென
உனக்கு தெரியாதா என்ன ?
---- கே. அசோகன்.