அம்மாவின் மடியே

அம்மாவின் மடியே!
அரியணை ஒன்றில்
அமர சொன்னார்கள்!
அரியணை என்பதே
முள்கிரிடமப்பா ?
அதெல்லாம் வேண்டாமே
அறுதியிட்டு மறுத்தேன்!
அம்மா கேட்டாள்
அரியணை ஏன் ஏற்கவில்லை
என்றே…..
அம்மாவின் ”மடியே”
அரியணையிலும்
அற்புதமானது அதனாலே
அரியணை வேண்டாமென்றேன்
அன்பாக சொன்னேன்!
அம்மாவின் முகத்திலோ…
ஆயிரமாயிரம் கோடுகள்!
அத்தனையுமே…..
சந்தோஷ கோடுகளே!
---- கே. அசோகன்.