காத்திருந்த தாவணி

வீட்டுவாசலில் நின்றபடி
தினமும் பத்துமணி அளவினிலே
நான் கடக்கின்ற நேரத்தில்
எனை கண்வைத்து பார்த்திருந்தாள்!

மின்சாரம் இல்லாத பொழுதுகளில்
மாடினிலே தனை மறந்துபோய்
மணி அளவில் நின்றபடி
எனை வெரித்துப் பார்த்திருந்தாள்!

என் கால்பதிந்த மணலினிலே
தன் பெயரை எழுது ரசித்தபடி
நின்றதனை மெதுவாக நான்
கண்ணோரம் பார்த்திருந்தேன்!

காலை ஏழுமணி அளவினிலே
வயலுக்கு வந்த படி
கைநழுவிய பானை போல்
மனதை பட்டென்று சொல்லிவிட்டாள்!

முதலிரவில் சேலையை
அவிழ்பதற்க்கு தயங்குகின்ற
மனைவியை போல்
தயக்கத்தில் அச்சம் கொண்டு நின்றிருந்தேன்!!

காதல் இல்லை என் மனதில்
என அறிவுரை விளக்கி
பெண்மானே,உன்னை ரசித்தபடி
என் கண்களை நிறுத்திவிட்டேன்!

நாளடைவில் வீட்டுவாசலில்
கண்ணீர் கோலம் போட்டபடி
மங்கை அவள் நின்றதில்
மனம் சில்லாய் உடையலானேன்!

வெளியூர் போகின்ற நேரத்தில்
அவள் வீட்டுவாசலை பார்த்தபடி
நான் நின்றிருந்தேன்.அங்கே
அவள் இல்லை என்றதில்
மனம் நொந்தேன்!

போகின்ற காலத்தில்
மங்கை அவள் ஞாபகம் இல்லாத நாளென்று என்னிடம் இல்லை
என அறிந்தபடி கண்ணீர் பொழிந்தேன்!

சொல்லாத காதலால் நான்
அனுபவித்த சோகங்கள்,
சொல்லியும் மங்கை அவள்
அனுபவித்த காலங்கள்,
எல்லாம் இனியோடு முடியும்
என ஊருக்கு போகலானேன்!

மழையோடு குடைபிடித்து
பல வருடம் கழிந்திருந்தும்
கண்ணீரை தாங்கியபடி
என் தாவணி நனைகின்றாள்!

அதோ!அக்காவியத்திற்க்கு
காதல் குடை இனி என்றும் நான்!!

எழுதியவர் : (26-Jan-16, 11:20 pm)
பார்வை : 96

மேலே