பிள்ளை வரம்

- - - - - - - - - - - - -
அன்று
இரட்சித்த வேளைகளில்
ஏங்கி அழுது
பிள்ளை வரம்
வாங்கி
பெற்றெடுத்த
முத்துக்கள் !
நான்
இராட்சத பிடியில்
தொலைதூரப்
படுகுழியில்
தவறுப்பட்டேன். ....?
இன்று
அன்னை வரம்
கேட்டு
ஆலயத்தில்
அழுகிறது
என் குழந்தைகள். ...!
- பிரியத்தமிழ் : உதயா -